மதுரை: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த சிவமுருக ஆதித்தன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஆதார் அட்டை என்பது ஒருவரின் தனிப்பட்ட அடையாளம். தேர்தல் காலத்தில் வாக்காளர் அடையாள அட்டை அவசியமான ஆவணமாகும்.
முறைகேடுகளை தடுக்கும்விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியாகியுள்ளது. எனவே இந்த மனுவும் விசாரணைக்கு உகந்ததல்ல என்றுகூறி தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.