புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் உரிமையை நிலைநாட்டுவதற்கான யாத்திரையை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான விழாவில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிஹாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சசாரமில் தொடங்கிய இந்த யாத்திரையின் மூலம் 1,300 கி.மீ தூரம் பயணித்து மக்களிடையே வாக்காளர் திருட்டுக்கு எதிரான பிரச்சாரங்களை இந்தியா கூட்டணி முடுக்கி விட உள்ளது.