புதுடெல்லி: வாக்குப்பதிவு வீடியோக்களை பெற தடை விதித்து தேர்தல் விதிமுறையில் திருத்தம் கொண்டுவந்ததற்கு எதிராக ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தேர்தல் விதிமுறைகள் 1961-ன்படி, தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆய்வுக்காக பொதுமக்கள் பெறலாம் என இருந்தது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைபடி, இந்த விதிமுறையில் மத்திய சட்ட அமைச்சகம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருத்தம் செய்தது. இதன்படி வாக்குப்பதிவு மையங்களின் சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை பெற தடை விதிக்கப்பட்டது.