ஆம்பூர்: வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு பெண்கள் பிரிவில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரிவர சிகிச்சை அளிப்பதில்லை எனவும், அவர்கள் ஏதாவது மருத்துவ உதவி கோரினால் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை அனுப்பி செவிலியர் பணியை செய்ய சொல்வதாகவும் புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் நேற்று பெண் தூய்மை பணியாளர் ஒருவர், நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இம்மருத்துவமனையில் பெண்கள் வார்டில் பல இடங்களில் தரை சேதமாகியுள்ளது. இதனால் எலிகள் வார்டு பகுதிகளுக்குள் வந்து செல்வதாகவும், அதை தடுக்க தரையை சீரமைக்கவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் appeared first on Dinakaran.