சென்னை: சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் 12 மற்றும் 13 வயது மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் 2 ஜோடி சீருடைகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சி முகாம் டிஏசி டெவலப்பர்ஸ், 2 குரோ ஹெச்ஆர் நிறுவனம், ரோமா குரூப், காஸ்கோ இந்தியா பிரைவெட் லிமிட்டெட் ஆதரவுடன் நடத்தப்பட்டது.