கேப் கெனாவரெல்: 9 மாதங்களுக்கு பிறகு பூமியின் காற்றை சுனிதா வில்லியம்ஸ் சுவாசித்தார். இந்திய வம்சாவளியினரான அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ம் தேதி ஒருவார பயணமாக சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் சென்ற போயிங் நிறுவனத்தின் புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விண்கலம் மட்டும் தனியாக பூமிக்கு திரும்பியது.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்டனர். இதற்கிடையே, சுனிதா, வில்மோர் மற்றும் ஏற்கனவே விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள மற்ற விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக 4 பேர் கொண்ட புதிய குழுவுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று காலை 10.05 மணிக்கு சுனிதா உள்ளிட்ட 4 பேரும் புறப்பட்டனர். சூழ்நிலை காரணமாக விண்வெளியில் 9 மாதங்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக தரையிறங்கினார்.
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேர் பயணித்து, கடலில் மிதந்த விண்கலம் சிறிய கப்பலில் ஏற்றப்பட்டது. அமெரிக்காவின் ஃபுளோரிடா கடலில் பத்திரமாக இறங்கி மிதந்த டிராகன் விண்கலம் கப்பலில் ஏற்றப்பட்டது. டிராகன் விண்கலத்தில் உள்ளே இருந்த 4 விண்வெளி வீரர்களும் கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். டிராகன் விண்கலம் மூலம் 17 மணி நேரம் பயணித்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர். விண்வெளிக்குச் சென்று 286 நாள்களுக்குப் பிறகு, பூமிக்கு வந்து சேர்ந்தார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்தார்.
விண்கலத்தில் இருந்து வெளியே வந்த 4 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விண்கலத்தில் இருந்து வெளியே வந்த 4 பேரும் ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, ஹூஸ்டன் விண்வெளி மையம் அழைத்துச் செல்லப்பட்டனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதங்கள் இருந்த சுனிதா, வில்மோர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். விண்வெளியில் உணவு உற்பத்திக்கான லெட்யுஸ் கீரைச் செடி வளர்ப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விண்வெளி நிலைய காற்றில் கலக்கும் நீரை பிரித்து எடுக்கும் கருவி பற்றிய பரிசோதனையும் நடந்தது
“சுனிதா, வில்மோர் எதிர்கொள்ளப் போகும் சவால்கள்”
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமிக்கு திரும்பிய பிறகும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விண்வெளியில் ஈர்ப்பு விசை இருக்காது என்பதால் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே சூரிய உதயத்தை காண முடியும். ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சூரிய உதயத்தை காண நேரிடும் என்பதால் உடலில் பாதிப்பு ஏற்படும். விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பியவுடனும் மனரீதியாக இயல்பு நிலைக்குத் திரும்பவும் காலம் எடுக்கும். பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்களால் இயல்பாக நிற்கவோ, நடக்கவோ கூட முடியாது
தங்கள் குடும்பத்தினரை சந்திக்க வீட்டுக்கு கூட செல்ல முடியாது, மனரீதியாக சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். விண்வெளியில் இருந்து திரும்பியவர்கள், பூமியில் நிமிர்ந்து நிற்கும்போது தலை சுற்றல், மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனச் சோர்வை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்களின் அளவு பல்வேறு
காரணிகளால் விண்வெளியில் அதிகரிக்கும். விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருக்கும் வீரர்கள் சந்திக்கும் முதன்மைப் பிரச்சனையாக எலும்புச் சிதைவு ஏற்படும். விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் முதுகெலும்பு, இடுப்பு எலும்பு அடர்த்தி மாதம் 1.5% வரை குறையும்.
நீண்டகாலம் விண்வெளியில் தங்கும்போது எடை இழப்பு, கண் பார்வை, தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். பூமியில் நாம் வேலை செய்வதற்கு ஏற்ப தசை வலுவடையும், ஆனால் விண்வெளியில் அவ்வாறு செய்ய இயலாது. விண்வெளியில் இருக்கும் போது தோராயமாக ஒருவர் 150 செ.மீ. உயரம் இருந்தால் 154 செ.மீ. வரை உயரம் அதிகரிக்கும். புவி ஈர்ப்பு விசை இல்லாததால் முதுகுத் தண்டுவட டிஸ்க்குகள் நீண்டு உயரம் அதிகரிக்கக் கூடும் என்று நாசா தெரிவித்துள்ளது.
4 பேருக்கும் 45 நாட்கள் சிகிச்சை
பூமிக்கு திரும்பும் விண்வெளி வீரர்களுக்கு சுமார் 45 நாட்கள் நாசாவின் மையத்திலேயே சிகிச்சை வழங்கப்படும். உடல், மனரீதியாக மீண்டு வந்து புத்துணர்வு பெறுவதற்கான சிகிச்சைகளை நாசா வழங்கும். வார்ம்-அப் பயிற்சியில் தொடங்கி டிரெட்மில், சைக்கிள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். எலும்புச் சிதைவை முழுமையாக சரிசெய்ய முடியாத சூழல் ஏற்படலாம் என்றாலும் எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தசை வலுவடைய பயிற்சிகள், சரிவிகித உணவு மூலம் இயல்புநிலைக்கு திரும்ப சுமார் 6 மாதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
The post விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்: பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் appeared first on Dinakaran.