மனிதர்கள் பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் பூமியில், இதயம் தொடர்பான நோய்கள் என்பது சாதாரணமான ஒன்றாக இருக்கும்போது, மனித இனத்தின் எதிர்கால லட்சியமான ‘விண்வெளியில் குடியேறுவது’ சாத்தியமானால், பூஜ்ஜிய ஈர்ப்பு விசை சூழலில் இதயத்தில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் அதிக நாள் தங்கினால் இதயம் வேகமாக முதுமை அடையுமா?