புதுடெல்லி: விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், ஆனால் அரசோ கும்பகர்ணன்போல் தூங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
டெல்லியில் உள்ள கிரி நகர் காய்கறிச் சந்தைக்கு சமீபத்தில் சென்ற ராகுல் காந்தி, பொதுமக்கள் மற்றும் காய்கறி கடைக்காரர்களுடன் உரையாடினார். அப்போது, விலைவாசி உயர்வால் அவதிப்படும் ஏழை எளிய மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, "சமீபத்தில் டெல்லியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றேன். மளிகைக் கடைகள் என்பது பொருட்களை விற்கும் இடம் மட்டுமல்ல. அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் உணர்ச்சிபூர்வமான மற்றும் கலாச்சார தொடர்புகளைக் கொண்டுள்ளனர்.