ராவல்பிண்டி: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றி கூட பதிவு செய்யாமல் வெளியேறி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.
‘ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025’ தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இந்த நிலையில் ‘குரூப் – ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெல்லாமல் வெளியேறி உள்ளது.