நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மார்ச் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் தாலுகாவிலுள்ள வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வருடம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோயிலில் நாளை மறுநாள் மாசி மாத வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
தேரோட்டத்தை முன்னிட்டு வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை மறுநாள் (மார்ச் 10ம் தேதி) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது; ” நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிக்குத் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வரும் திங்கட்கிழமை மார்ச் 10ம் தேதி நடைபெற உள்ளது.
அன்று வேதாரண்யம் தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். மேலும் அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
The post வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி நாகையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.