புதுடெல்லி: மூதாதையர் சொத்துகளை கையாளுவதில் முஸ்லிம்களை ஷரியத் சட்டத்துக்கு பதிலாக மதச்சார்பற்ற இந்திய வாரிசுரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா என்ற சர்ச்சைக்குரிய பிரச்சினையை ஆராய உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புக் கொண்டது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கே.கே.நவ்ஷாத் தாக்கல் செய்த மனுவில், “இஸ்லாம் மதத்தை விட்டு நான் விலகாமலேயே எனது மூதாதையர் சொத்துகளை ஷரியத் சட்டத்துக்கு பதிலாக மதச்சார்பற்ற இந்திய வாரிசுரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.