நடிகர் ஷாம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'அஸ்திரம்'. இப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். நடிகர் ஷாம் உடன் நிரஞ்சனி, நிழல்கள் ரவி, அருள் டி ஷங்கர், ஜீவா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜடா, 8 தோட்டாக்கள் மற்றும் பொம்மை நாயகி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள சுந்தரமூர்த்தி இப்படத்திற்கும் இசையமைக்கிறார். தன ஷண்முகமணி இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஷாம் நடித்துள்ளார். தொடர் கொலைகள் செய்யும் சிரீயல் கில்லரை யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார் ஷாம். இதனால் அவர் வேலைக்கு இடையூறு ஏற்படுவது போன்று ட்ரெய்லரில் காண்பித்துள்ளனர். 'மதம் மாறினால் தான் நல்லது செய்வார் என்றால் அவர் கடவுள் இல்லை கட்சித் தலைவர்' என்பது போன்ற வசனங்கள் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை கூட்டும் வகையில் உள்ளன. இப்படம் பிப்ரவரி 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.