வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்திய மணவர்கள் ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். தேசிய குடிமக்கள் கட்சி (என்சிபி) என பெயரிடப்பட்ட இந்த புதிய கட்சி குறித்த அறிவிப்பு, நாட்டின் அரசியலில் பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.