சென்னை: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் பாகம் மார்ச் 10-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச்.9) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, மத்திய அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப். 1-ம் தேதி தாக்கல் செய்தார். பல்வேறு அமளிகளுக்கு மத்தியில் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 அன்று முடிவடைந்தது. இடைவேளைக்குப் பிறகு கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 வரை நீடிக்கிறது.