டெல் அவிவ்: இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் போர் நடக்கும் நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் அளித்துள்ள பேட்டியில், ‘ஹவுதிகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை செலுத்தும் இந்த நாளில் நான் சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் ஹமாஸ்களை, ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம். ஹமாஸ் தலைவன் ஹனியே, ஹிஸ்புல்லா தலைவன் நஸ்ரல்லாவை கொன்றோம்; இன்னும் அந்த அமைப்புகளின் தலைவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் தலையைத் துண்டிப்போம். ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை ஒடுக்கிவிட்டோம்.
சிரியாவில் ஆசாத் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டோம். தீவிரவாத அச்ச ரேகைக்கு பெரிய அடி கொடுத்துள்ளோம். அதேபோல் ஏமனில் உள்ள ஹவுதிகளுக்கு கடுமையான பதிலடி கொடுப்போம். செங்கடலில் சரக்கு கப்பல்களுக்கு அவர்கள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை முறியடிப்போம். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்படும் அவர்கள் இஸ்ரேலுக்கு நெருக்கடி தருகிறார்கள்’ என்றார்.
The post ஹனியே, நஸ்ரல்லாவை நாங்கள் கொன்றோம்: இஸ்ரேல் ஒப்புதல் appeared first on Dinakaran.