புதுடெல்லி: ஹமாஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என இந்தியாவிடம் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. தீவிரவாதத்திலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என இந்தியா கூறுகிறது. அதே நேரத்தில் பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கைக்கு இந்தியா ஆதரவாக உள்ளது. ஐ.நாவில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கவும் இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது.