போர்ட் அவ் பிரின்ஸ்: ஹைட்டியில் உள்ள கென்ஸ்கோப் பகுதி குற்றவாளிகளால் மிகவும் பாதிக்கப்படாத பகுதியாகும். இந்நிலையில் கடந்த எட்டு நாட்களாக ஆயுதம் ஏந்திய கும்பல் இந்த பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. இது குறித்து மேயர் கென்ஸ்கோப் மேயர் ஜீன் மாசிலன் கூறுகையில், ”விவ் அன்சான்ம் கும்பல் துப்பாக்கியுடன் வீடு வீடாக புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. அவர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். இதுவரை சுமார் 40 பேர் வரை பலியாகி இருக்கக்கூடும். இறந்தவர்களில் பாதிரியார்க்ள, ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்கள் மலைத்தொடரின் அடிவாரத்தில் கூலித்தொழில் செய்பவர்கள்” என்றார். போர்ட் அவ் பிரின்சின் 85சதவீத பகுதியை ஆயுத கும்பல் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
The post ஹைட்டியில் ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்குதல் துப்பாக்கி சூட்டில் 40 பேர் பலி appeared first on Dinakaran.