ஹைதராபாத்: மறைந்த நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு நிறைவு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் என்டிஆருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியிருந்தார்.
இந்நிலையில் என்.டி.ராமாராவின் மகன் மோகனகிருஷ்ணா, என்டிஆர் இலக்கிய அறக்கட்டளையின் தலைவர் ஜனார்தன், உறுப்பினர் மதுசூதனராஜு ஆகியோர் ஹைதராபாத்தில் தெலங்கானா அமைச்சர் நாகேஸ்வர ராவ், முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேசினர். அப்போது, என்.டி.ராமாராவுக்கு ஹைதராபாத்தில் 100 அடி உயரத்தில் சிலை அமைக்க இடம் ஒதுக்க கோரிக்கை விடுத்தனர். இதற்கு தெலங்கானா முதல்வர் சம்மதம் தெரிவித்து, விரைவில் இதற்கான இடம் ஒதுக்கப்படும் என உறுதி அளித்தார்.