புதுடெல்லி: இந்தியாவுடனான 2-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 248 ரன்களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய அந்த அணியின் வீரர்கள் ஷாய் ஹோப், ஜான் கேம்ப்பெல் ஆகியோர் அரை சதமடித்து களத்தில் உள்ளனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.