புதுடெல்லி: சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலக சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் 2,784 ரேட்டிங் புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் தயான்சந்த் கேல் ரத்னா விருது பெற்ற அவர், சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசியை (2,779.5) 5-வது இடத்துக்கு தள்ளி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 2832.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா (2802) 2-வது இடத்திலும், ஃபேபியானா கருனா (2798) 3-வது இடத்திலும் உள்ளனர்.