தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த புயலால் 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.