சென்னை: ஃபெஞ்சல் புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் மாவட்ட வாரியாக அவசர கால உதவி எண்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கும் அருகே கடக்கக்கூடும் எனவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.