லண்டன்: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் லண்டன் நகருக்குச் செல்ல வேண்டிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான நிலையில், இந்தியாவுக்கு முழு உறுதுணையாக இருப்போம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் கூறியது என்ன? – விமான விபத்தை அடுத்து பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிரிட்டிஷ் குடிமக்கள் பலருடன் லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளாகி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. நிலைமை குறித்து எனக்குத் தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது, இந்த ஆழ்ந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது எனது எண்ணங்கள் உள்ளன" என தெரிவித்துள்ளார்.