‘குட் பேட் அக்லி’ படத்தில் பழைய பாடல் ஒன்றை மீண்டும் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. அஜித் நடித்துள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டு பல்வேறு திரையரங்குகள் ஃபுல்லாகிவிட்டது. இப்படத்தில் இருந்து பிரத்யேக தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.
இதில் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ளார். இந்த இருவருக்கும் சிறு பாடலொன்று இருக்கிறது. இதற்காக புதிய பாலொன்றை உருவாக்காமல், பிரபலமான ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு நடனமாட வைத்து படமாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலில் சிம்ரனின் நடனம் மிகவும் பிரபலம் என்பதால், அதற்கு ஏற்றார் போன்று நடன அசைவுகள் உருவாக்கி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.