பிப்ரவரி 6-ம் தேதி ‘விடாமுயற்சி’ படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இன்று (ஜன.16) மாலை ‘விடாமுயற்சி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. இத்துடன் படத்தின் வெளியீட்டு தேதியும் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்த போது, பிப்ரவரி 6-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த தேதியினை அனைத்து விநியோகஸ்தர்களிடமும் தெரிவித்துள்ளது படக்குழு.