அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது ‘விடாமுயற்சி’ படத்தின் ட்ரெய்லர். காதலும் காதல் நிமித்தமுமான வசனங்கள், காட்சிகளுடன் தொடங்கும் ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர் பின்னர் ஆக்‌ஷன் மோடுக்கு நிதானமாக மாறுகிறது. க்ரைம் – த்ரில்லராக இருந்தாலும் நிதானமாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது ‘இன்டென்ஸ்’ தன்மையை கூட்டும் என்பதை உணர முடிகிறது.
படத்தில் அஜித்தின் வசனங்களும், அவரது பாடி லேங்குவஜும் ஒட்டுமொத்தமாக படம் முழுவதும் ஸ்டைலிஷ் ஆக வலம் வருவதை உறுதி செய்கிறது. அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினாவின் இருப்பும் கூட இந்த ட்ரெய்லரில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிப்ரவரி 6-ல் ரிலீஸ்: லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’. அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியிடுகிறது.