அஜித்தின் உடல் எடை குறைப்பு ரகசியம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது: ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது மிகவும் சீரியசான உடல் எடை குறைப்பில் ஈடுபட்டார் அஜித். அது மிகவும் அபாரமானது. எனக்கு தெரிந்து யாரும் அப்படி செய்யமுடியுமா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. ஒருநாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே எடுத்துக் கொள்வார். திடீரென ஒரு நாள் முழுக்க பட்டினியாக இருப்பார். திரும்பவும் அடுத்தநாள் ஒருவேளை உணவு சாப்பிடுவார். வெறும் தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டிருப்பார்.