அடிலெய்டு: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் சதம் அடித்து அசத்திய நிலையில் பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா 8 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவருக்கு உறுதுணையாக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா செயல்பட்டிருந்தனர்.