
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் முதல் சிங்கிள் வரும் வியாழக்கிழமை வெளியாகிறது.
சுதா கொங்காரா இயக்கி வரும் படம் ‘பராசக்தி’. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது.

