நாகர்கோவில்: நாகர்கோவில், அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் என்ற அனிகுட்டன் (48). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி தன்னியா(40). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உண்டு. தன்னியா பத்துகாணி சந்திப்பு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மனைவியின் கடைக்கு அனில்குமார் சென்றுள்ளார்.
அப்போது பத்துகாணி நிஜாபவன் பகுதியை சேர்ந்த பா.ஜ. கிளை செயலாளர் மதுகுமார் (52), தன்னியாவுக்கு முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மனைவிக்கு இன்னொருவர் முத்தம் கொடுப்பதை பார்த்ததும் அனில்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தன்னியா கணவரை கம்பால் தாக்கினாராம். இதில் அனில்குமார் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து மறுநாள் மதுகுமார், அனில்குமாரிடம் தகராறில் ஈடுட்டதோடு தகாத வார்த்தைகள் திட்டி வாளால் அனில்குமாரை வெட்ட முயன்றுள்ளார். இதில் இருந்து அதிர்ஷ்டவசமாக அனில்குமார் தப்பித்துக் கொண்டார். இருப்பினும் தாக்குதலில் காயம் அடைந்த அனில்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவங்கள் தொடர்பாக அனில்குமார் ஆறுகாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தன்னியா மற்றும் மதுகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து பாஜ பிரமுகர் மது குமார், அனில்குமாரின் மனைவி தன்னியாவை போலீசார் தேடி வருகின்றனர்.
The post அடுத்தவர் மனைவிக்கு முத்தம் பாஜ செயலாளருக்கு வலை appeared first on Dinakaran.