சென்னை: அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை, டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் “கரும்புக்கான ஆதார விலை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தீர்கள். ஆட்சிக்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போது இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.