வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அடுத்த வாரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அந்த பிரதேசத்தில் மூன்றரை ஆண்டுகளாக சண்டை நடைபெற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். நிறைய ரஷ்யர்கள் உயிரிழந்துவிட்டனர். நிறைய உக்ரேனியர்களும் உயிரிழந்துவிட்டனர். இந்த பிரச்சினை மிகவும் சிக்கலானது. நாங்கள் சிலவற்றை திரும்பப் பெறப் போகிறோம். சிலவற்றை மாற்றப் போகிறோம். இருவரின் நன்மைக்காகவும் சில பிரதேசங்களை மாற்றுவோம்.