சென்னை: அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் மழை பொழிவு இருக்கும். இதே போல நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் ராமநாதபுரத்தில் (பகுதி அளவில்) மழை நீடிக்கும். புதுச்சேரி மற்றும் கடலூரிலும் கனமழை பொழியும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி தொடங்கியே பரவலாக மழைப்பொழிவு இருக்கிறது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால், தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.