அடுத்த 6 மாதத்தில் ‘இந்தியன் 3’ வெளியாகும் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்று படுதோல்வியை தழுவியது. ஆனால், அப்படத்தின் கதை அத்துடன் முடிவடையவில்லை. அதன் 3-ம் பாகத்தின் ட்ரெய்லர் இறுதியில் இணைக்கப்பட்டு இருந்தது.