சென்னை: கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை முதல் 26-ம் தேதி வரை சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், நாளை (மார்ச் 21) முதல் 26-ம் தேதி வரை அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.