புதுடெல்லி: அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் இருப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (Tata Institute of Fundamental Research) மொத்தமுள்ள 1,448 பணியிடங்களில் 839 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதேபோல், பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (Bhabha Atomic Research Centre) மொத்தமுள்ள 14,445 பணியிடங்களில் 3,841 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.