2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அணுமின் சக்தித் திட்டங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது: வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அணுமின் சக்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். அணுமின்சக்தி துறைக்கு ஊக்கம் தருவது முக்கியமானது. நமது நாட்டில் மின்சாரம் தயாரிப்பதற்கு அடிப்படையாக நிலக்கரி உள்ளது. ஆனால், அதை மாற்றி அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க முன்னுரிமையை மத்திய அரசு அளித்து வருகிறது.