மாஸ்கோ: அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவேன் என தெரிவித்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, போரை நிறுத்த ரஷ்யாவுக்கு 50 நாள் காலக்கெடு விதித்தார் ட்ரம்ப். பின்னர் இதை 12 நாட்களாக குறைத்தார். இதுகுறித்து ரஷ்ய முன்னாள் அதிபரும் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வதேவ் எக்ஸ் தளத்தில், “ட்ரம்பின் ஒவ்வொரு காலக்கெடுவும் போரை நோக்கி தள்ளும் நடவடிக்கை’’ என பதிவிட்டார்.