சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த கொடூரமான சம்பவத்துக்கு ஆணையம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. மேலும், நீதி கேட்டு போராடும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆணையம் துணை நிற்கும் என்பதை தெளிவுபடுத்துகிறோம்.