புவனேஷ்வர்: “மத்திய தொகுப்பிலிருந்து புதுபிக்கத்தக்க எரிசக்தியை பெறுவதற்கு ஒடிசா மாநில அரசு அதிகாரிகள், அதானி குழுமத்திம் இமிருந்து லஞ்சம் பெற்றதாக கூறுவது பொய்யானது, ஆதாரமற்றது” என்று பிஜு ஜனதா தளம் கட்சித் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் கடந்த 2000 முதல் 2024 ஜூன் வரை நவின் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில், லஞ்சப் புகார் குறித்து ஒடிசாவின் முன்னாள் எரிசக்தித் துறை அமைச்சரும், பிஜேடி எம்எல்ஏவுமான பி.கே.டெப் அளித்த பேட்டியில், "ஒடிசாவின் பெயரில் கூறப்படும் இந்த வகை குற்றச்சாட்டுகள் பொய்யானவை, அடிப்படை ஆதாரமற்றவை. ஒடிசா அரசு எந்தவிதமான ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. அனைத்து ஒப்பந்தங்களும் கிரிட்கோ, மின் விநியோக நிறுவனம் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு இடையே தான் இருந்தன. பிஎஸ்ஏ தொடர்பாக நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டாலும், இந்த விவகாரங்களில் மாநில அரசுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை.