வயநாடு: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தொழிலதிபர் அதானியை பிரதமர் நரேந்திர மோடி பாதுகாக்கிறார் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அஞ்சுகிறது” என்றார்.
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அமோக வெற்றி பெற்றார். அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க பிரியங்காவும் அவரது அண்ணன் ராகுல் காந்தியும் சனிக்கிழமை அங்கு சென்றனர். மலப்புரம்,கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் இருவரும் பங்கேற்றனர்.