இந்தியாவில் 2020 – 2022 காலக்கட்டத்தில் 4,484 சிறை மரணங்கள் (Custodial deaths) நிகழ்ந்துள்ளதாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது நிகழும் மரணங்கள் லாக் அப் மரணங்கள் அல்லது சிறை மரணங்கள் என அழைக்கப்படுகின்றன.
காவல் துறையினர், கைதுசெய்யப்பட்ட நபர் மீது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், முன்விரோதத்துடன் செயல்படுதல், உடல் – மனரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் சிறை மரணங்கள் நிகழ்கின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 21, எந்த ஒரு நபரின் உயிரையோ, அடிப்படை உரிமைகளையோ பறிக்கக் கூடாது எனக் கூறுகிறது. இதன்படி, காவல் துறையினால் அத்துமீறி நடத்தப்படும் லாக் அப் மரணங்கள் சட்டப்படி குற்றமாகவே கருதப்படும்.