இந்தியாவின் நிலத்தடி நீர் நிலைமை குறித்து, மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB – Central Ground Water Board) ஆய்வு ஒன்றை நடத்தியது. நைட்ரேட், யுரேனியம் மாசுபாடு பிரச்சினையால் நாட்டின் பல மாநிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின், யேல் பல்கலைக்கழகம் 2022இல் ‘பாதுகாப்பற்ற குடிநீர்’ தொடர்பாக நடத்திய ஆய்வில், உலகின் 180 நாடுகளில் இந்தியா 141ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போதைய சூழல் நீடித்தால், 2030க்குள் இந்தியாவில், 70% தண்ணீர் மாசடையும் எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.