*பரவாக்கோட்டை இன்ஸ்பெக்டர் பேச்சு
மன்னார்குடி : சிசிடிவி கேமராக்கள் அதிகளவில் பொருத்தியுள்ள பகுதிகளுக்கு குற்றவாளிகள் வருவதற்கு அஞ்சுவார்கள். இதன்மூலம் குற்றங்கள் குறை வாய்ப்புள்ளதாக இன்ஸ்பெக்டர் சசிகலா பேசினார்.சிசிடிவி கேமராக்கள் எந்த பகுதியில் அதிகளவில் பொருத்தப்பட்டுள்ளதோ அந்தப் பகுதிக்குள் குற்றவாளிகள் வருவதற்கு அஞ்சுவார்கள்.
இதன் காரண மாக குற்றங்களில் எண்ணிக்கை கணிசமாக குறையும் என புள்ளி விபரங்கள் கூறுகிறது. இதையடுத்து, மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் பொது மக்களின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு பெரும் நகரங்கள் முதல் கிராம ங்கள் வரை பல்வேறு இடங்களில் அதிக அளவில் பொருத்தப் பட்டு வருகிறது.
இதன் மூலம் சாலை விபத்துக்கள் போக்குவரத்து விதி மீறல்களை கண்கா ணித்தல், குற்ற வழக்குகளின் புலனாய்வு என பல்வேறு நேரங்களில் சிசிடிவி கேமராக்களின் பங்களிப்பு என்பது இன்றைக்கு முக்கியமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், மன்னார்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குற்றங்களை குறைக்கவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடு பவர்களை அடையாளம் காணவும் மாவட்ட எஸ்பி கருண் கரட் அறிவுறுத்த லின் பேரில் டிஎஸ்பி பிரதீப் வழிகாட்டுதலின் கீழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் சி சி டிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக, பரவாக்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் குமர வேல் ஏற்பாட்டில் கடைவீதியில் 3 கண்காணிப்பு கேமராக்கள் நேற்று மாலை பொருத்தப்பட்டது.இவற்றை பரவாக்கோட்டை இன்ஸ்பெக்டர் சசிகலா நேற்று பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து பேசுகையில், பொது மக்களுக்கான பாதுகாப்பு பணியில் சிசிடிவி கேமராக்களின் பங்களிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் மிக மிக முக்கியமாக உள்ளது.
எண்ணிக்கை அதிகரிக்கும் போது குற்றங்கள் கண்டிப்பாக கணிசமாக குறையும். சமூக ஆர்வலர்களின் பொருளாதார பங்களிப்போடு நடந்துவரும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் இது போன்ற பணிகளில் வாய்ப்புள்ளவர்கள் இணைந்து உதவ முன் வர வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் எஸ்ஐக்கள் பிரேம் ஆனந்த், செந்தில்குமார், வட்ட நிலை எழுத் தர் பொதியப்பன், தனிப்பிரிவு காவலர் பிரவீன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
The post அதிகளவில் சிசிடிவி கேமரா உள்ள பகுதிகளில் குற்றங்கள் குறைய வாய்ப்பு appeared first on Dinakaran.