சென்னை: “அதிமுக – பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி அல்ல. அது ஒத்துக்கொள்ளாத கூட்டணி. ஒரு கட்டாயத்தின் பேரில் இந்தக் கூட்டணி அமைந்திருக்கிறது. எந்த நேரம் விரிசல் வரும், எந்த நேரம் தொண்டர்கள் புரட்சி செய்வார்கள் என்று சொல்ல முடியாது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இன்று (ஏப்.17) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகள் சேர்ந்து உருவாக்கியது அசோசியேட் ஜெர்னல். இது எங்களது தலைவர்களின் பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் நேஷனல் ஹெரால்டு, நவ்ஜீவன் உள்ளிட்ட 3 பத்திரிக்கைகள் கொண்டுவரப்பட்டன.