சென்னை: மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய கோரி, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. மக்களுக்கு நல்ல செய்தி வரும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் நேற்று ஒரு தனி தீர்மானம் கொண்டு வந்தார். அவர் தெரிவித்ததாவது: மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. மாநில அரசின் அனுமதியின்றி, முக்கிய கனிமங்களுக்கான உரிமங்களை மத்திய அரசு ஏலம் விடக்கூடாது
என்று கடந்த 2023 அக்டோபர் 3-ம் தேதி தமிழக அரசு வலியுறுத்தியும், மத்திய அரசு ஏல நடவடிக்கை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.