சென்னை: தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த வட்டக் கழக செயலாளர் ஐஸ்ஹவுஸ் எஸ். மூர்த்தி கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாலும், கழத்தின் கட்டுப்பாட்டை மீறி அதற்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை, திருவல்லிக்கேணி கிழக்கு பகுதி தெற்கு வட்டக் கழகச் செயலாளர் ஐஸ்ஹவுஸ் எஸ். மூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். தொண்டர்கள் யாரும் அவருடன் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ” என்று தெரிவித்துள்ளார்.