விருதுநகர்: விருதுநகரில் நேற்று இரவு நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் மேடைக்கு வந்து பொன்னாடை போர்த்திய அதிமுக நிர்வாகியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்புரையாற்றினார். அமைப்புச் செயலாளர் சீனிவாசன், செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் அமைச்சரும் கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான மாபா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.