மேட்டுப்பாளையம்: மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (35). இவரது மனைவி திவ்ய பிரியா (28). இருவரும் தங்களது உறவினர்கள் நால்வருடன் காரில் ஊட்டிக்கு வந்தனர். ஊட்டியை சுற்றி பார்த்து விட்டு நேற்று மாலை மதுரைக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையம் வழியாக சென்றனர். அப்போது, காரை பார்த்திபன் (32) என்பவர் ஓட்டி வந்தார். கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவு அருகே கார் வந்து கொண்டிருந்தபோது பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், கார் சாலையோர மண்திட்டில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், திவ்ய பிரியா மற்றும் அவரின் உறவினர்கள் பரமேஸ்வரி (44), வளர்மதிக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திவ்ய பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், காயமடைந்த பரமேஸ்வரி மற்றும் வளர்மதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இறந்துபோன திவ்ய பிரியா அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தி ஆவார்.
The post அதிமுக மாஜி அமைச்சர் பேத்தி விபத்தில் பலி: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.