சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது. 2002ல் வைத்திலிங்கத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகரப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக வைத்திலிங்கம் செயல்பட்டார். வைத்திலிங்கம் தற்போது ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து வருகிறார். கடந்த 2011 முதல் 2016 ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது, குடியிருப்புகள் கட்ட தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
மேலும் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சட்பபிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விகாரத்தில் அமலாக்கத்துரை உள்ளே வந்தது. வைத்திலிங்கம் மீது அமலாக்கத்துறை தனியே வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் வைத்திலிங்கத்தின் வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறை தீவிரவாக சோதனை மேற்கொண்டது.
மொத்தம் 10 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், பண மோசடிதடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100.92 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. இதனை அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூரவ எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி அசையா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை appeared first on Dinakaran.